GOD'S YOUTH MINISTRIES
  GOD'SYOUTH SRI LANKA
 





   GOD'S YOUTH SRI LANKA





Bro.Suthagaran

Responsible for the God's Youth in Sri Lanka










நீங்கள் தேவனை தனிப்பட்ட முறையில் அறிய
விரும்புகிறீர்களா?

 

 நீங்கள் தேவனை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறீர்களா?
இவைகளெல்லாம் உனக்கு என்ன செய்யப் போகிறது?
நாம் இன்றும் இயேசு கிறிஸ்துவோடு கூட ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக் கொள்ள
முடியுமா?
இயேசு இன்னும் நம்மில் ஆர்வமுள்ளவராய் இருக்கிறாரா? கிறிஸ்துவோடு கூட ஒரு
தனிப்பட்ட உறவை வைத்துக் கொள்வது என்பதின் பொருள் என்ன, மேலும் இன்னும்
எந்த வழியில் நம்முடைய வாழ்க்கையில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அவ்விதமான
அர்ப்பணிப்பை ஒரு மனிதன் எப்படி ஏற்படுத்துவது?
அவைகள் நல்ல கேள்விகள் இயேசு கிறிஸ்துவின் முக்கியத்துவத்தை புரிந்து
கொள்கிறவர்களுக்கே உரிய கேள்விகள். இந்த கேள்விகளுக்கும், மேலும் நீங்கள்
இயேசுவைப் பற்றிக் கொண்டிருக்கும் பிற கேள்விகளுக்கும் பதிலளிக்க உதவும்
வகையில் கீழ்க்கண்ட குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன.
இயேசுவின் உயிர்த்தெழுதல் நிமித்தம் அவரைப் பின்பற்றுபவர்கள் ஒரு மரித்த
மதஸ்தாபகரை கனப்படுத்துகிறதில்லை.
அவர்கள் அவரோடு கூட முக்கியமான தனிப்பட்ட உறவை வைத்துள்ளார்கள்.
இயேசுகிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார் அதோடு தம்மை நம்பி தமக்குக் கீழ்ப்படிகிற
அனைவருடைய வாழ்வையும் உண்மையாகவே வளமாக்குகிறார். நூற்றாண்டுகள்
காலமாக திரள் ஜனக் கூட்டங்கள் இயேசு கிறிஸ்துவின் மேன்மையை
அங்கீகரித்துள்ளனர் அநேகர் இந்த உலகத்தில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
பிரெஞ்சு இயற்பியலாளரும், தத்துவ ஞானியுமான பிளேஸ் பாஸ்கல் 'ஒவ்வொரு
மனிதனுடைய உள்ளத்திலும், தேவன் மாத்திரமே தன்னுடைய குமாரனாகிய
இயேசு கிறிஸ்துவின் மூலமாக நிரப்பக்கூடிய ஒரு தேவ வடிவிலான வெற்றிடம் உண்டு"
என்று சொல்வதின் மூலமாக ஜனங்களுக்கு இயேசு தேவை என்று கூறுகிறார்.
நீங்கள் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறீர்களா?
உங்களால் முடியும்! தேவன் உங்கள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த அன்பின் நிமித்தம்,
தேவையான அனைத்தையும் அவர் ஏற்கனவே செய்து வைத்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக நீங்கள் ஒரு
தனிப்பட்ட உறவை அனுபவிக்க முடியும். தேவனை விட்டு நம்மை பிரிக்கும்
அப்பிளவை இயேசு நமக்கு இணைத்துக் கொடுத்திருக்கிறார். இயேசுவை தனிப்பட்ட
முறையில் அறிந்து கொள்வதற்கும் மற்றும் அவர் வாக்கு பண்ணின பரிபூரண
ஜீவனை நீங்கள் அனுபவிப்பதற்கும் கீழ்க்கண்ட நான்கு விதிகள் உதவியாயிருக்கின்றன.








விதி 1
தேவன் உங்களை நேசிக்கிறார் மேலும் அவரைத் தனிப்பட்ட முறையில் அறியும்படி
உங்களைப் படைத்திருக்கிறார்.
 
யோவான் 3:16 'தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன்
எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத்
தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 17:3 'ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய
இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்."
நாம் தேவனை தனிப்பட்ட முறையில் அறிவதற்கு தடையாயிருப்பது எது?
 
விதி 2 
மனிதன் பாவமுள்ளவன் மற்றும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறான்
எனவே அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளவும் அவருடைய
அன்பை அனுபவிக்க முடியாதவனாகவும் உள்ளான்.
ரோமர் 3:23 'எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்."
ரோமர் 6:23 'பாவத்தின் சம்பளம் மரணம்" (தேவனிடமிருந்து ஆத்மீகப் பிரிவு)
ரோமர் 8:6-8 'மாம்ச சிந்தை மரணம் ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை அது தேவனுடைய
நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது.
மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்."
 
 
 
ஒரு பெரும்பிளவு மனிதனை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறது.
மனிதன்
நல்வாழ்க்கை வாழ்தல்,
தத்துவம் மற்றும் மதம் ஆகிய
மனுஷீகமான
முயற்சிகளின் மூலமாக தேவனை அடையவும்
அவரோடு ஒரு தனிப்பட்ட
உறவை ஏற்படுத்தவும் தொடர்ச்சியாக முயற்சிக்கிறான்.
ஆனால் அவன்
தவிர்க்க முடியாதபடி தோல்வியுறுகிறான்.

















மூன்றாம் விதி இந்த பிளவை இணைப்பதற்கு ஒரே வழியை விளக்குகிறது.
 
விதி 3
மனிதனின் பாவத்திற்கு தேவன் அருளும் ஒரே பரிகாரம் இயேசு கிறிஸ்துவே.
அவர் மூலமாகவே நாம் தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளவும்
அவருடைய அன்பை அனுபவிக்கவும் முடியும்.
ரோமர் 5:8 'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே,
தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.
1 கொரிந்தியர் 15:3-6 'நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக
ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி
நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி
மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
அதன்பின்பு ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில்
தரிசனமானார்......"
யோவான் 14:6 'அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்ளூ
என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."
 
 
நம்முடைய பாவத்திற்கான தண்டனையை
ஏற்றுக்கொள்ளும்படி தம்முடைய
குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை
சிலுவையில் மரிக்க அனுப்பினதின் மூலமாக
தேவன் நம்மை பிரிக்கிற பெரும்பிளவை
இணைத்துவிட்டார்.

















 
 
 
 



 
ஆனால் இந்த உண்மைகளை அறிவது மட்டும் போதாது.
 விதி 4 

நாம் தனிப்பட்ட முறையில் இயேசுகிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும்
ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பொழுது நாம் தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்து
கொள்ளவும் அவருடைய அன்பை அனுபவிக்க முடியும்.
யோவான் 1:12 'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்
கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய
பிள்ளைகளாகும்படி,
அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்."
எபேசியர் 2:8-9 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டூர்கள்
இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு ஒருவரும்
பெருமைபாராட்டாதபடிக்கு
இது கிரியைகளினால் உண்டானதல்ல.
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது சுயத்தை விட்டு தேவனிடத்திற்கு திரும்புவதும்
(மனந்திரும்புதலின் ஆவியுடன்) கிறிஸ்து நம் வாழ்க்கைக்குள் வந்து நம் பாவங்களை
மன்னிக்கவும் நாம் எப்படியிருக்க வேண்டுமென அவர் விரும்புகிறாரோ அப்படி நம்மை
மாற்ற அவரை நம்புவதுமாகும். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனென்றும் அவர்
சிலுவையிலே நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும் அறிவுப்பூர்வமாக ஒத்துக்
கொள்வது மட்டும் போதாது. வெறும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவம் மட்டும் போதாது.
நாம் நம்முடைய விருப்பத்தின் ஒரு செய்கையாக விசுவாசத்தினால் இயேசுகிறிஸ்துவை
ஏற்றுக் கொள்கிறோம்.
இந்த இரு வட்டங்களும் இருவிதமான வாழ்க்கைகளை குறிக்கின்றன:
 




























 
 


எந்த வட்டம் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் ஒத்திருக்கிறது?
எந்த வட்டம் உங்கள் வாழ்க்கைையை ஒத்திருக்க விரும்புகிறீர்கள்?
இயேசுகிறிஸ்து உங்கள் வாழ்க்கைக்குள் வரும்படிக்கு ஒரு அழைப்புக்காக
காத்துக்கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் சொல்கிறார்,
'இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு,
கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்" (வெளிப்படுத்தல் 3:20).
அநேகமாக கிறிஸ்து உங்கள் இருதய கதவை தட்டுகிறதை நீங்கள் உணரக்கூடும்.
விசுவாசத்தினால் இப்பொழுதே நீங்கள் அவரை உங்களுக்குள் வரும்படி அழைக்கலாம்.
தேவன் உங்கள் இருதயத்தை அறிவார் எனவே உங்கள் வார்த்தைகள் அவ்வளவு
முக்கியமானவை அல்ல. கீழ்க்கண்டது ஒரு ெஜபத்தின் மாதிரி.
ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறேன்.
என்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததற்காக நன்றி. என்னுடைய வாழ்வின்
கதவை நான் திறந்து உம்மை என் வாழ்வில் இரட்சகராக, ஆண்டவராக ஏற்றுக்
கொள்கிறேன்.
என் வாழ்வை நீர் ஆண்டு கொள்ளும். என் பாவங்களை மன்னிக்கிறதற்காகவும்
நித்திய ஜீவனை தருகிறதற்காகவும் உமக்கு நன்றி. நான் எப்படிப்பட்டவனாக இருக்க
நீர் விரும்புகிறீரோ அப்படி என்னை மாற்றும்.
இந்த ெஜபம் உங்கள் இருதய வாஞ்சையை வெளிப்படுத்துமானால் இந்த ெஜபத்தை
இப்பொழுதே ெஜபியுங்கள். கிறிஸ்து தாம் வாக்களித்தபடியே உங்கள்
வாழ்க்கைக்குள் வருவார்.
ஒருமுறை நீங்கள் கிறிஸ்துவை உங்கள் வாழ்வில் அழைக்கும் போது
அவர் ஒருக்காலும் உங்களை விட்டு விலகுவதில்லையென்று வாக்குப் பண்ணுகிறார்.
எபிரெயர்13:5 'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை
கைவிடுவதுமில்லையென்று அவர் சொல்லியிருக்கிறாரே."
தேவனை தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிந்து கொள்வதே உங்கள்
வாழ்வின் மிகப்பெரிய தீர்மானம். நீங்கள் இயேசுகிறிஸ்துவை உங்கள்
வாழ்க்கையில் வரும்படி அழைத்தீர்களா?





 
 
  co. GOD'S YOUTH  
 
www.godsyouth.fr.gd Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement